ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

தொலைந்து போனவை - கவிதை

 தொலைந்து போனவை - கவிதை 

----------------------

அடுப்புச் சுவற்றில்

சமையல் புகையின்

கறுப்புக் கோலம்


மரக் கதவில்

கீறிச் செதுக்கிய

மனித உருவம்


மாடப் பிறையில்

சிந்திக் கிடந்த

சித்த நாதன் விபூதி


திண்ணைச் சிமெண்டைத்

தேய்த்துக் கிடந்த

கோரைப் பாய்கள்


கோடி ரூபாய்க்கு

விற்ற வீட்டோடு

தொலைந்து போயின


---------------------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலி போகும் நேரம் - கவிதை

 வலி போகும் நேரம் - கவிதை  -------------------------------- முற்றிய முதுமை நோயில் முனகும் அவள் கண்ணுக்குள் முதலிரவுக் கணவன் முகம் முதற்பிள்ள...