துர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 நவம்பர், 2026

துர்க்கையின் பரிசு - கதை புதிது குழுவில் சிறுகதை

 


துர்க்கையின் பரிசு - கதை புதிது குழுவில் சிறுகதை 

------------------

 (முன்குறிப்பு : இந்தப் படம் வரைந்தவர் எனது மனைவி உஷா பாரதி மேடம்.  அவர்கட்கு நன்றி  )

அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குனர்  அறையில் குழுமி இருந்தவர்கள் அனைவரும் ப்ரோக்ராம் மேலாளர்கள். அவர்களில் சிறந்த ப்ரோக்ராம் மேலாளருக்கு பரிசு வழங்கும் வருடாந்திரக் கூட்டம் அது.

 

'வாங்க சுந்தர் , நீங்கதான், நமது கம்பெனியின் இந்த வருட சிறந்த ப்ரோக்ராம் மேலாளர். உங்களது அத்தனை ப்ரொஜெக்ட்களையும் திறம்பட  நிர்வகித்து , கம்பெனிக்கு  லாபமும், கஸ்டமர்களுக்கு மகிழ்ச்சியும் அளித்து சிறப்பான   பணி ஆற்றியுள்ளீர்கள் .     உங்களுக்கு இந்த செர்டிபிகேட், மெடலுடன் சேர்த்து, நீங்கள் நமது கம்பெனியின் இயக்குனர் ஆகும் இந்த    பதவி உயர்வு ஆர்டரையும்  வழங்குவதில் மிகவும் பெருமை அடைகிறேன். '

 

'உங்களிடம் நீண்ட நாட்களாக நான் கேட்க விரும்பிய இந்தக் கேள்வியையும் இப்போது கேட்டு விடுகிறேன் . உங்கள் நன்றி உரையில் அதற்குரிய பதிலையும் சொல்லும் படி கேட்டுக் கொள்கிறேன் ' என்று புன்சிரிப்புடன்     சொன்னார் , தலைமை இயக்குனர் .

 

தொடர்ந்து , ' உங்கள் அறையில் இருக்கும் அந்தப் பத்துக் கைகளிலும் பலவிதமான ஆயுதங்களை ஏந்தி இருக்கும் அந்த துர்க்கை மாதா படத்தைப் பார்க்கும் போதெல்லாம், உங்களின் சிறந்த மேலாண்மைக்கு அந்த தெய்வத்தின் அருள்   இருப்பது தான் காரணமோ என்று தோன்றுகிறது. அதை பற்றி கொஞ்சம் விளக்குங்கள் '

 

கூடியிருந்தோர் கைத்தட்டலுக்கு  நடுவே ,அனைத்தையும் தலை வணங்கிப் பெற்றுக் கொண்ட  சுந்தர் 'நன்றி ஐயா , தங்களுக்கும்  இங்கு கூடியிருக்கும் நண்பர்க்கும் முதற்கண் என் வணக்கங்கள். இந்தப் பதவி உயர்வுக்கும், பாராட்டுக்கும் காரணமாக, என்னுடன் பணியாற்றிய என்  ப்ராஜெக்ட் , ப்ரோக்ராம் நண்பர்கள், கஸ்டமர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதையும் நன்றியுடன் நினைவு கூர்ந்து உங்கள் கேள்விக்கும்  பதில் சொல்லி விடுகிறேன் . '

 

‘எனது ஒவ்வொரு ப்ராஜெக்ட், ப்ரோக்ராம் இவற்றின் வெற்றிக்கு முழு முதல் காரணம், அவற்றின்  வாடிக்கையாளர்களை நாங்கள் மதித்து சரியான முறையில் நடந்து அவர்களின் நம்பிக்கையைச் சம்பாதித்த விதம் தான். அதற்கு மிகவும் உதவியது, இந்தத் துர்க்கை படத்தின் முழுமையான அர்த்தம்தான். இவள் நான் வணங்குகின்ற தெய்வம் என்பதை விட, இவள் என் தாய், என் தோழி, என் பாட்டி  என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இந்த ஆயுதங்கள் குறிப்பது எல்லாம் வெறும் அழிவைப் பற்றி  அல்ல. அவை அனைத்தும் ஆக்கத்தைக்  குறிக்கும் அடையாளங்கள் . '

 

'உதாரணத்திற்கு அந்தக் கத்தி குறிப்பது அறிவை. அந்த வில் குறிப்பது நோக்கத்தை. அந்த அம்பு குறிப்பது அதை அடைவதை. அந்தத் திரிசூலம் குறிப்பது எண்ணம், சொல் , செயல் மூன்றும் ஒருங்கிணைவதை . இப்படி ஒவ்வொன்றும் நமது ப்ரொஜெக்ட்டைத் திறம்படி நிர்வகிக்க உதவும் ஆக்க பூர்வமான ஆலோசனைகள். '

 

'நாம் அனைவரும் அறிந்தது போல் எங்கள் குழுவின் ப்ரொஜெக்ட்களுக்கு  பல நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்கள். அமெரிக்கா, ஜப்பான், சைனா,ரஷ்யா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, அராப் என்று பல நாடுகள். ஒவ்வொருவரையும் நாங்கள் அணுகும் முறை வேறு. அமெரிக்கர்கள் வெளிப்படை முறையை  விரும்புவர்.  சீனர்கள் நட்பு முறையை விரும்புவர் . ஒவ்வொரு நாட்டினரும் விரும்பும்  அணுகு முறைகள்  வேறு வேறு '

 

'ஆனால் அனைவரின் நோக்கமும் ப்ராஜெக்ட் வெற்றி தான். நாங்கள் அவர்களை அணுகும் முறைக்குரிய ட்ரைனிங், முதலில் எங்கள் குழு உறுப்பினர்களுக்குக்   கொடுத்து விடுவோம். அதில் இந்தத் துர்க்கையின் மேற்கூறிய ஆயுத ஆலோசனைகளும் உண்டு ' என்று லேசான புன்முறுவலுடன் தொடர்ந்தார்.

 

' நீங்கள் கேட்கத் தயங்கிய இன்னொரு கேள்விக்கும் சேர்த்தே பதில் சொல்லி விடுகிறேன். நாற்பது  வயது தாண்டியும் நான் இன்னும் பிரம்மச்சாரியாய் இருப்பதன் காரணம் பற்றி உங்களில் சிலர் தங்களுக்குள் பேசிக் கொள்வதையும் அறிவேன். அதற்கும் காரணம் இந்தத் துர்க்கை மாதாதான். '  என்றதும் , கூடியிருந்த கூட்டத்தில் லேசான சலசலப்பு  .

 

தொடர்ந்தார் ' இந்தத் துர்க்கையின் முகத்தின் கருணை , எனக்கு என் தாயின் நினைவைக் கொண்டு வருகிறது . இந்தத் துர்க்கையின் கையில் உள்ள தாமரை , எனக்கு அமைதி  கொடுத்து என்னை வருடி விடும்  தோழியின் கையாக இருக்கிறது. அவள் மடி , நான் படுத்துறங்கிய பாட்டியின் மடியாக இருக்கிறது. இதை விட வேறென்ன சொந்தம் எனக்கு வேண்டும். சொந்தமும் அவளே. என் அலுவலக வாழ்வின் ஆலோசனையும் அவளே .இந்த கம்பெனியும், இந்தத்  தேவியும் தான் என் குடும்பம் '

 

' என் மனதைத் திறந்து இவை அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த தலைமை இயக்குனருக்கு நன்றி ' என்று முடிக்கவும் அறையில் நிரம்பிய கரகோஷம், பக்கத்தில் இருந்த சுந்தர் அறையிலும் நுழைந்து, அங்கு அவரது மேஜை மேல் இருந்த  படத்தில், அந்த துர்க்கா மாதாவிடம் நிறைந்து அவள் புன்னகையின் பொலிவைக் கூடியது  .

 

------- நாகேந்திர பாரதி 


My Poems/Stories/Articles in Tamil and English 


துர்க்கையின் பரிசு - கதை புதிது குழுவில் சிறுகதை

  துர்க்கையின் பரிசு - கதை புதிது குழுவில் சிறுகதை  ------------------  ( முன்குறிப்பு : இந்தப் படம் வரைந்தவர் எனது மனைவி உஷா பாரதி மேடம...