திங்கள், 31 ஆகஸ்ட், 2026

அழுகைத் தொடர்- கவிதை

 அழுகைத் தொடர்- கவிதை 

------

வயக்காட்டுக் கூலி வேலை முடித்து

வயித்துப் பாட்டுக் காசு கையில் வாங்கி


சாராயக் கடை வாசலிலே கிடக்கும்

போதை ஏறிய புருஷனைத் தாங்கி


வீட்டுக்குள் நுழையும்போது விளம்பரம்

அரசாங்கத் தொலைக்காட்சிப் பெட்டியிலே


நகையை அடகு வைக்க வேணாம்

விக்கிறதே உங்களுக்கு நல்லது


அரிசியை உலையில் கொதிக்க விட்டாள்

அழுகைத் தொடர் பார்க்க ஆரம்பித்தாள்


---------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாயுமானவன் - குறுங்கதை

  தாயுமானவன்   - குறுங்கதை ------------- தீப்பெட்டித் தொழிற்சாலையில் இருந்து   வரும்போதே தம்பியின் நினைப்புதான் அவனுக்கு. பக்கத்து வீட்ட...