ஒரே கேள்வி - கவிதை
——
‘நா யாரு ’
கேட்டவள் அம்மா
நினைவை இழுக்கும்
முயற்சியில் குழந்தை
வளர்ந்தது குழந்தை
தேய்ந்தது தாய்மை
‘ நா யாரு ’
கேட்பவள் குழந்தை
நினைவை இழந்த
தளர்ச்சியில் அம்மா
———நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
நீ வந்த போது - கவிதை ------------------------ மேகப் பொதியில் ஒன்று மெத்தென மோதியது போல் தூறல் மழைச் சாரல் தொட்டுத் தடவியது போல் தெக்குத் த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக