திங்கள், 18 நவம்பர், 2013

நதியின் ஓட்டம்

நதியின் ஓட்டம் 
--------------------------
ஓடுகின்ற நதியாய் 
ஓடுகின்ற காலம் 

சுற்றமும் நட்பும் 
சூழ்ந்த பாதையில் 

வறண்ட கோலமும் 
திரண்ட கோலமுமாய் 

கடக்கும்  ஊர்கள் 
நடக்கும் நாட்கள் 

கடலைச் சேருமுன் 
எத்தனை கற்பனைகள் 
----------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 5 நவம்பர், 2013

மினுக்கும் சினிமா

மினுக்கும் சினிமா
------------------------------------
உணர்ச்சியில் கடித்துத் 
துப்பும் வசனம் 

ஆராய்ச்சி செய்தும் 
அகப்படாத கதை

நாற்புறம் துடிக்கும் 
நகலெடுத்த இசை 

சதைகள் ஆடும் 
நடனம் ஆகும் 

மேற்கோ கிழக்கோ 
மினுக்கும் சினிமா 
------------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 1 நவம்பர், 2013

பார்வையின் மறுபக்கம்

பார்வையின் மறுபக்கம் 
------------------------------------
பால்கனியில் இருந்து
பார்த்தால் தெரிகிறது 

அந்தக் கால அழகி 
இந்தக் காலக் கிழவியாய் 

அந்தக் கால ரவுடி 
இந்தக் கால பிச்சைக்காரனாய் 

அந்தக் கால அம்பாசடர் கார் 
இந்தக் கால ஓட்டை ஒடசலாய்

நமக்கும் கூட 
வயதாகி விட்டதோ 
-------------------------------நாகேந்திர பாரதி