வெள்ளி, 4 ஏப்ரல், 2025

சந்தோஷங்கள் - கவிதை

 சந்தோஷங்கள் - கவிதை 

-------------------

முற்றத்துப் புடலைக்குக்

கல் கட்டி விடும்

சந்தோஷம்


சுகப்பேறு பார்த்தவளுக்கு

சேலை பணம் தரும்

சந்தோஷம்


பத்து முட்டைகளும் குஞ்சாக்கிய

தாய்க்கோழி பார்க்கும்

சந்தோஷம்


அழகரை ஆற்றில் பார்த்து

ஊர் திரும்பிய

சந்தோஷம்


அழிஞ்ச கண்மாய் மீன்களின்

குழம்பு ருசியில்

சந்தோஷம்


அப்பத்தாவின்  சந்தோஷங்களை

அசை போட்டபடி

நியூயார்க் பாரில்


நுரை ததும்பும் பீருக்கு

நொறுக்குத் தீனியோடு

பேரனின்  சந்தோஷம்


---------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தீர்ப்பு - சிறுகதை

 தீர்ப்பு - சிறுகதை ------------------------------- 'வித்யா, பத்தாவது வந்தாச்சு , இனிமே பாடங்கள் எல்லாம் ஒழுங்கா படிச்சு , நீட் பரீட்சைய...