மழை - கவிதை
-----------
பேஞ்சும் கெடுக்கும்
காஞ்சும் கெடுக்கும்
மழை மட்டுமா
மனமும் கூடத்தான்
அடங்கி வந்தால்
அமிர்தமாய் இனிக்கும்
அடங்க மறுத்தால்
நஞ்சாய் மாறும்
ஆறும் குளமுமாய்
அமைந்து போனாலும்
சேரப் போவது
கடலில் தானே
ஜீவன் சேர்வது
பரத்தில் என்ற
சேதி புரிந்தால்
சிரமம் இல்லை
ஆறும் மனம்
அமைதிக் குளம்
---------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக