சனி, 10 அக்டோபர், 2026

தாயுமானவன் - குறுங்கதை

 

தாயுமானவன்  - குறுங்கதை

-------------

தீப்பெட்டித் தொழிற்சாலையில் இருந்து  வரும்போதே தம்பியின் நினைப்புதான் அவனுக்கு. பக்கத்து வீட்டு ஆயா பார்த்துக் கொள்வாள் தான். வாரச் சம்பளத்தில் பாதி அவளிடம் தானே கொடுக்கிறான். . அந்தப்  பிஞ்சு முகத்தின் சிரிப்பில் மயங்கி ' தம்பி , தம்பி ' என்று அவன் பிறந்த நாள் அன்று அவனைத் தோளில் தூக்கிக்  கொஞ்சியவன் .

 

'அம்மா,  தம்பியை நான்தான் படிக்க வைப்பேன்.  தீக்குச்சி அடுக்கும் காசெல்லாம் அவனுக்கே சேமிக்கப் போகிறேன்' என்று அம்மாவிடம் சொன்னபோது  அவன்  நினைக்கவில்லை , அப்பாவும் அம்மாவும் தீப்பெட்டித் தொழிற்சாலைத் தீவிபத்தில் கருகிப் போவார்கள் ,   என்று  .

 

'இந்த ஊர் மக்கள் மத்தியில் இவனை ஆபிசராக்கி  காட்டுவேன் '   என்ற கனவை கண்களில் தேக்கி வைத்திருப்பவன் அவன்.  தூங்கிக் கொண்டிருந்த தம்பியைத்  தோளில் தூக்கி உசுப்பி, கொண்டு வந்த வாழைப்பழத்தை ஊட்டி விட்டு திரும்பவும் தோளில் சாய்த்து தட்டிக் கொடுத்து தூங்க வைக்கும் அவன் கண்களில் தெரியும் தாய்மை சொல்கிறது  . அவன் தாயுமானவன் என்று .

-------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாயுமானவன் - குறுங்கதை

  தாயுமானவன்   - குறுங்கதை ------------- தீப்பெட்டித் தொழிற்சாலையில் இருந்து   வரும்போதே தம்பியின் நினைப்புதான் அவனுக்கு. பக்கத்து வீட்ட...