குறும் விமர்சனங்கள் - குவிகம் புத்தகக் கொலுவில்
------------
குவிகம் சுந்தரராஜன் அவர்கள் குவிகம் குழுவில் நடத்திய புதுமையான புத்தகக் கொலுவில் நான் படித்த சில புத்தகங்கள் பற்றி நான் எழுதிய குறும் விமர்சனங்கள்
----------------------------------------------------------
'பொன்னியின் செல்வன்'
பற்றி
----------------
காமப்
புத்தகங்கள் கருத்தைக் குழப்பிக் கொண்டிருந்த
பள்ளிக்காலத்தில், காதல் காட்சிகள் நிறைந்த கல்கியின் ' பொன்னியின் செல்வன் ' நாவலில்
குந்தவைதேவி , வந்தியத்தேவன் முதல் சந்திப்பின் கலகலப்பும் ,
பாதாளச் சிறைச்சாலை வார்த்தைகளும்
, கடலில் மூழ்கும் நேர நினைவுகளும்,
படித்து , உடலைத் தாண்டிய உணர்வுகளின்
உன்னதத்தை உணர்ந்து சரியான வழியில் மனதைத்
திருப்பி விட்ட எழுத்தின் வலிமைக்காகவே பல
முறை படித்தேன்
'துப்பறியும்
சாம்பு ' பற்றி
----------------
‘காக்காய்
உட்காரப் பனம்பழம் விழுந்த' கதையாக விளாம்பழ
மண்டைக்காரச் சாம்பு துப்பறிய , இன்ஸ்பெக்டர் கோபாலனுக்கு வெற்றி கிடைக்கிற கதைகளின் திடீர்த் திருப்பம்
நகைச்சுவையுடன் அமைவதை, சிவகங்கையில் எனது வக்கீல்தாத்தா வீட்டில்
,அம்மாச்சி, அந்தக்கால விகடனில் வந்த சித்திரக்கதை தேவனின் ' துப்பறியும் சாம்பு' பைண்டிங்
செய்து வைத்திருந்ததில் படித்தது
முதல் ,கோபுலு அவர்கள் வரைந்த சாம்புவையும் ,வேம்புவையும், கோபாலனையும் பின்னால், உத்தரகோசமங்கை நூலகத்திலும் விரும்பிப் படித்த ஞாபகம் வருகிறது
'கொலையுதிர்
காலம் ' பற்றி
----------------நாகேந்திர
பாரதி
அறிவார்ந்த
கணேஷ் , குறும்புக்கார வசந்த் என்று இரட்டை வேடத்தில் சுஜாதா தோன்றும் கதைகளை விரும்பிப் படித்த காலத்தில் வந்த 'கொலையுதிர் காலத்தில் 'புதிரான விஷயங்களை விஞ்ஞான விளக்கத்தோடு எடுத்துச் சென்று விடுவித்த விறுவிறுப்பை
ரசித்துப் படித்த நினைவு வருகிறது
' கள்ளிக்காட்டு
இதிகாசம் ' பற்றி
-----
வைகை அணையின்
கீழ் புதைந்து கிடக்கும் மண்ணின் வாழ்க்கையையும், மக்களின் வாழ்க்கையையும் நம் மனக்
கண்ணில் கண்ணீர் மிதக்கக் கொண்டு வந்து காட்டிய , 'சாஹித்ய அகாடெமி' பரிசு பெற்ற,
'கள்ளிக்காட்டு இதிகாசம்' படைத்த வைரமுத்து
அவர்களும் , மூதாதையர்களின் உணர்வுகளைத் தன் ஓவியங்களால் நமக்குக் காட்டிய 'மணியம் செல்வன்' அவர்களும் , இதைத் தொடராக வெளியிட்ட 'ஆனந்த விகடன்'
இதழும் நினைவில் நிற்கிறார்கள்
'திருக்குறள்
- தெளிவுரை ' பற்றி
----------------
எத்தனையோ தெளிவுரைகள் பிற்காலத்தில்
படித்திருந்தாலும், பேராசிரியர்
மு வ அவர்களின் திருக்குறள்
தெளிவுரை பள்ளிப்பருவத்தில் படித்தது இனிய இலக்கிய நினைவு.
எந்த மேடையிலும் எந்த விஷயத்திற்கும் பேசுவதற்கு
மேற்கோள் கொடுக்கின்ற இந்த 1330 குறட்பாக்களை மனப்பாடம் செய்ய வேண்டும் என்று பள்ளிப்பருவத்தில்
ஆரம்பித்த முயற்சி , இந்தியன் வங்கிப் பருவத்திலும் தொடர்ந்து இப்போது
ஓய்வுப்பருவத்திலும் தொடர்கிறது. இன்னும் முழுமை அடையாத அந்த முயற்சியைத் தூண்டி
விடுகிறது இந்தப்
புத்தகக் கொலு .
'இன்னும்
சில படைப்பாளிகள் ' பற்றி
-----------
பல படைப்பாளிகளைப் பற்றியும் அவர்களின் கதைகளைப் பற்றியும் சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதப்பட்ட புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் கிடைத்த 'நண்பர் கிருபானந்தன் ' அவர்களின் ' சில படைப்பாளிகள் ' இரண்டு புத்தகங்களையும் படித்து ஏற்பட்ட ஆர்வத்தில் ( ஆர்வக் கோளாறில் ) சாஹித்ய அகாடெமி வெளியீடான 'இந்திய இலக்கியச் சிற்பிகள் ' வெளியீடுகளை வாங்கிக் குவித்து வழக்கம் போல் இன்னும் படிக்காமல் வைத்திருக்கும் நினைவு வருகிறது
----------------------------------------------------------------------------------------------------------------------------
'அழகியசிங்கரின்
சிறுகதைகள் ' பற்றி
-----------------
கதைகள் , கவிதைகள் , கட்டுரைகள் என்று எழுதிக் குவித்திருக்கும் அன்பு நண்பர் அழகியசிங்கரின் அத்தனை படைப்புகளையும் வாங்கி விடும் வழக்கம் உண்டு . குறிப்பாக அவரின் சிறுகதைகளின் இந்த முழுத் தொகுப்பில்
அவரது பார்வையின் பல்வேறு பரிமாணங்களை அவரது எளிமையும் சுவையும் கலந்த இயல்பான எழுத்தில் படித்து ரசித்த ஞாபகம் வருகிறது
‘ஸ்ரீமந் நாராயணீயாம்ருதம் ‘பற்றி’
---------------
கல்கியின்
'பொன்னியின் செல்வனில்' தொடங்கி முத்தாய்ப்பாக நண்பர் சுந்தரராஜன் அவர்களின் ' ஸ்ரீமத்நாராயணீயாம்ருதம்' பக்திப்
பாடல்களைப் பற்றிக் குறிப்பிடாமல் எனது குறும் விமர்சனங்கள்
நிறைவுறாது .
----
சுந்தரராஜன்
அவர்களின் நோய்
தீர்த்த பாடல்களைத் தமிழில்
மொழிபெயர்த்து நாம் அனைவரும் நலமுடன்
வாழ அவர்
நமக்குத் தந்திருக்கும் அந்த உயர்ந்த நோக்கத்தைப்
பாராட்டுவதா, அந்தப் பாடல்களின் தமிழ் இனிமையை ரசிப்பதா , இந்தப் புத்தகம் எனது மனைவி உஷாபாரதி
அவர்களால் பூஜைஅறையில் வைத்து வணங்கப்பட்டு பாடப்படுவதைச் சொல்லி
மகிழ்வதா என்று தெரியவில்லை .
கொலுவின்
இறுதிநாளில் இதைக்காட்டி நம்மை நலமுடன் வாழ வாழ்த்தும் சுந்தரராஜன்
அவர்கட்கு வணக்கங்கள்
------------------------------------------------------------------------------------
இறுதியாக புத்தகக்
கொலுவில் இருந்த எனது கவிதை மின் புத்தகம்
' நகைச்சுவைப் பூங்கா ' பற்றி நண்பர் ' இந்திரா ராமநாதன் அவர்கள் எழுதிய குறும் விமர்சனம்
. அவர்கட்கு நன்றி
-----
திரு
நாகேந்திர பாரதியின் “ நகைச்சுவை பூங்கா “
------
“கவிதைக்குப் பொய் அழகாம் “ இதுதாங்க
பெரிய பொய்!
நாகேந்திரபாரதி சாரைப் பாருங்க! தன்னுடைய “teen age” ல் தான் பார்த்த/கேட்ட/அனுபவித்த அனைத்தையும் (வெத்திலை வாசம்கூட) அப்படியப்படியே - switch போட்டால் “உடன்எரியும்” பல்பு போல எழுதித்தள்ளி இருக்கிறார்!
ஊடாலே நகைச்சுவையும் , குறும்பும் (லேட்டாப் போச்சு இல்லே) சரிகையாய் பார்டர் கட்டுகிறது !
“நாலுபடம் ஓடினா வெள்ளிவிழா- அஞ்சுமாறும் அவுட்டானா அருகே பார்க்படுக்கை” - போகிற போக்கிலே அள்ளித்தெளிக்கும் நகைச்சுவை யதார்த்தங்கள் இயல்பாகவும் , அவரது இளம்வயதைப் பறைசாற்றுபவையாகவும் உள்ளன !
-------------------------------------------------------------------------------------
நவராத்திரி
விழாவில் புத்தகக் கொலு நடத்திய சுந்தரராஜன்
அவர்கட்கு நன்றி
---------நாகேந்திர
பாரதி
========
My Poems/Stories/Articles in Tamil and English










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக