செவ்வாய், 27 மே, 2025

தூரம் போனவை - கவிதை

 தூரம் போனவை - கவிதை 

---------------------------------------


கலங்கிக் கிடந்த கண்மாயில்

குளித்திருக்கக் கூடாது


நிரம்பி வழிந்த கோயிலுக்குள்

நுழைந்திருக்கக் கூடாது


பூக்கள் உதிர்ந்த சோலைக்குள்

போயிருக்கக் கூடாது


பூட்டியிருந்த அந்த வீட்டைப்

பார்த்திருக்கக் கூடாது


தூரம் போன நினைவுகளைத்

தொந்தரவு செய்திருக்கக் கூடாது


--------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மேகங்கள் -சிறுகதை

 மேகங்கள் -சிறுகதை ------------------- மேகங்கள் விலகும்போது வெளிச்சம் தந்துவிட்டு , மறைக்கும் போது ஒளிந்து கொண்டு, விளையாட்டு காட்டிக் கொண்ட...