ஞாயிறு, 5 ஜனவரி, 2025

ரசிகன் - கவிதை

 ரசிகன் - கவிதை 

------------------

அழகான பெண்களைப் பார்க்கும் போதெல்லாம்

அவளைப் பார்க்கத் தோன்றுகிறது


அறு சுவை உணவை உண்ணும்போதெல்லாம்

அவளோடு சேர்ந்துண்ணத் தோன்றுகிறது


வாச மலர்க் கூட்டங்களை ரசிக்கும் போதெல்லாம்

அவளின் அருகில் இருக்கத் தோன்றுகிறது


அவள் அறிந்தோ அறியாமலோ அவளுக்கு

ஆயிரம் ரசிகர்கள் 


அவள் அறிந்து அவன் மட்டும்தான்

அடைக்கல ரசிகன்


------------------நாகேந்திர பாரதி 



My Poems/Stories in Tamil and English 


சனி, 4 ஜனவரி, 2025

அவள் - கவிதை

 அவள் - கவிதை 

-----------

பட்டுப் புடைவையில்

அம்பாளாக


பருத்திப் புடைவையில்

அம்மாவாக


சுடிதார் பைஜாமாவில்

சுட்டிப் பெண்ணாக


பாவாடை தாவணியில்

பாப்பாவாக


அத்தனை ஆடைகளிலும்

கருணைப் பார்வையில்

காதலியாக


------------------நாகேந்திர பாரதி



My Poems/Stories in Tamil and English 


எல்லை- கவிதை

 எல்லை- கவிதை 

——-

தொல்லை செய்வதைத்


தள்ளவும் முடியாமல்

கொள்ளவும் முடியாமல்

சொல்லவும் முடியாமல்


ஏதோ ஒரு எல்லை

——நாகேந்திர பாரதி



My Poems/Stories in Tamil and English 


தலைமுறைகள் - கவிதை

 தலைமுறைகள் - கவிதை 

——-

வாழ்க்கையை

அதன் போக்கில் வாழ்ந்து விட்டு

போய்ச் சேர்ந்தது

ஒரு தலைமுறை


தன் போக்கில் வரவழைக்க

முயற்சி செய்தது

ஒரு தலைமுறை


யார் போக்கிலோ விட்டு விட்டு

குழம்பி நிற்கிறது

ஒரு தலைமுறை


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


ரசிகன் - கவிதை

 ரசிகன் - கவிதை  ------------------ அழகான பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் அவளைப் பார்க்கத் தோன்றுகிறது அறு சுவை உணவை உண்ணும்போதெல்லாம் அவளோட...