மண்டாடி - திரைப்பட விமரிசனம்
----------------
மீனவர் வாழ்வியலின் முக்கிய அங்கமான ' பாய்மரப் போட்டியை ' மையமாக வைத்து ஜனரஞ்சகமான 'மண்டாடி ' படம் கொடுத்துள்ளார் வெற்றி மாறனின் சிஷ்யர் மதிமாறன்.
முகவை மாவட்டத்தில் ( வைகை நதியின் முகத்துவாரம் - ராமனாதபுரம் மாவட்டம் ) பிறந்தவன் என்பதால், நான் இதைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும், அதுவும் தியேட்டரில் ஐமேக்ஸ்சில் நடுக்கடலில் நடக்கும் போட்டிக் காட்சிகளின் பிரமாண்டத்தை அனுபவித்துப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டு எங்களை வடபழனி 'போரம் மாலில் ஐமேக்ஸ் 'தியேட்டரில் முன்னமே புக் செய்து அழைத்துச் சென்ற என் மகள் ஜானகிக்கு முதலில் நன்றி.
ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் படம் ' வேற லெவல் ', நமது பாரம்பரிய ' பாய் மர விளையாட்டின்' பெருமையை நமக்கும் உலகுக்கும் எடுத்துரைக்கும் மண்மணம் , இல்லை கடல் மணம் கமழும் கவிதை இது. 'முகவை மைந்தன் ' குழுவின் தலைவனாக ' மண்டாடியாக ' நடிக்கும் சூரி அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் . இனி இவர் என்றும் ஆக்ஷன் கிங் .
அதே போல் வில்லனாக வருபவரும் வெறித்தனம். சூரியின் முன்னாள் காதலியாக வரும் மஹிமா படத்தின் இறுதிக்காட்சில் நடிப்பில் தூள் . சத்யராஜ் உட்பட ஒவ்வொரு நடிகரின் நடிப்பும் கதாபாத்திரத்தை உணர்ந்த நடிப்பு .
இண்டெர்வெல்லுக்கு முன்பு வரும் நடுக்கடல் பாய் மரப் போட்டியும் க்ளைமாக்சில் வரும் நடுக்கடல் பாய் மரப் போட்டியும் முகவை மாவட்ட ' தொண்டி ' ஊருபக்க கடற்பக்கம் எடுத்த பிரமாதமான பிரம்மாண்டமான ஒளிப்பதிவு, ஸ்டண்ட் காட்சிகள்.
நம்மை சீட்டின் நுனிக்கு வர வைக்கும் விறுவிறுப்பு. ஆரம்பம் முதல் இறுதி வரை , கொண்டு வந்த பாப்கார்னைக் கூடக் கொறிக்காமல், ஒவ்வொரு பிரேமையும் விட்டுவிடாமல் பார்க்க வைத்த விறு விறு படம். தயாரிப்பாளர் இதை, தெலுகு, கன்னடம் , மலையாளம் , ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டிருப்பதே இதன் வெற்றிக்கு சான்று.
ஐமாக்சில் பார்த்த அனுபவம் தனி சுகம். திரும்பி வந்தபின் , யூடியூபில் இதன் ரெவியூ பார்த்தபின் , இதன் நடிகர்களுக்கும், தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் , டெக்னீஷியன்களுக்கும் குவிந்துள்ள பாராட்டுகளை பார்த்தபின் இன்னும் ஒருமுறை , இந்தப் படத்தை OTT யில் வந்தபின்னும் பார்க்க வேண்டும்.
--------நாகேந்திரபாரதி
My Poems/Stories/Articles in Tamil and English

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக