வெள்ளி, 15 நவம்பர், 2024

முதல் நாள் - கவிதை

  முதல் நாள் - கவிதை 

———-


முரண்டு பிடித்து

முந்தானையை விடாது


அழும் பிள்ளையை

அதட்டி அனுப்பி விட்டு


வீடு திரும்பிப் பின்

மதியம் ஓடிப்போய்


மணி அடிக்கக்

காத்துக் கிடந்து


அழுதபடி வரும்

பிள்ளையை அணைக்கும்


அம்மாவுக்கும் பள்ளிக்கூடம்

அன்று மட்டும் பிடிக்காது


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முதல் நாள் - கவிதை

  முதல் நாள் - கவிதை  ———- முரண்டு பிடித்து முந்தானையை விடாது அழும் பிள்ளையை அதட்டி அனுப்பி விட்டு வீடு திரும்பிப் பின் மதியம் ஓடிப்போய் மணி...