சனி, 16 நவம்பர், 2024

அழுக்கின் அழுக்கு - கவிதை

 அழுக்கின் அழுக்கு - கவிதை 

--------------------

அழுக்கின் அழுக்கிற்கு

ஆரம்பம் ஆராய்ந்தால்

அறியாமை இருளகற்றும்

தீக்குச்சி கிடைத்து விடும்


வன்முறை அழுக்கெல்லாம்

வேலையில்லாச் சகதியினால்

பெண்ணடிமை அழுக்கிற்குக்

கல்வியின்மை காரணமாம்


தீண்டாமை அழுக்கெல்லாம்

திருந்தாத சில பேரால்

ஜாதி வெறி மத வெறியோ

சாத்திரத்தின் கழிவுகளாம்


ஞானமழை பொழிவதற்கு

நல்லோர்கள் வந்து விட்டால்

தானாக மறைந்து விடும்

தாங்கி வந்த அழுக்கெல்லாம்


ஆனாலும் ஒரு கேள்வி

அடி மனதில் எழுவதுண்டு


அன்றாடம் சோறுக்கே

திண்டாடும் பூமியிலே

அடிப்படை வசதிக்கே

அல்லாடும் நாட்டினிலே


மன அழுக்கை நினைப்பதற்கு

நேரமுண்டா மக்களுக்கு


--------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரசிகன் - கவிதை

 ரசிகன் - கவிதை  ------------------ அழகான பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் அவளைப் பார்க்கத் தோன்றுகிறது அறு சுவை உணவை உண்ணும்போதெல்லாம் அவளோட...