புதன், 21 செப்டம்பர், 2022

மறுத்து விட்ட காலம் - கவிதை

 மறுத்து விட்ட காலம் - கவிதை 

------------------------------------------------------

விளையாட வாப்பா என்ற போது 

விரட்டி அனுப்பினாய் 


விளையாட நினைக்கும் போது பிள்ளை 

வேலைக்குச் சென்று விட்டான் 


கடைக்குப் போகணுங்க என்ற போது 

கத்தி அனுப்பினாய் 


கடைக்குப் போக நினைக்கும் போது  மனைவி 

கால் வலியில் கிடக்கிறாள் 


பணம் அனுப்புடா என்றபோது 

பதுங்கி ஒதுங்கினாய் 


பணம் அனுப்ப நினைக்கும்போது அப்பா 

பாடையிலே போய் விட்டார் 


வாடா அரட்டைக்கு என்ற போது 

வலிந்து விலக்கினாய் 


அரட்டை அடிக்க நினைக்கும் போது நண்பனுக்கு 

ஆயிரம் பிரச்னைகள் 


கண்களால் ஜாடை செய்தபோது 

பாடத்தில் மூழ்கினாய் 


கண்களைத் திறந்து தேடும் போது அவள் 

கணவனுடன் வருகிறாள் 


அவர்கள் உன்னை நினைத்தபோது 

நீ அவர்களை மறுத்தாய் 


நீ அவர்களை நினைக்கும் போது 

காலம் உன்னை மறுத்து விட்டது 

-----------------------------நாகேந்திர பாரதி  

My Poems in Tamil and English 


1 கருத்து:

தனிக் குடித்தனம் - சிறுகதை

 தனிக்குடித்தனம் - சிறுகதை  ---------------------------------------------- 'இனிமே அவ பின்னாடி போய் விடுவான்'  நினைத்து நினைத்து குமை...