புதன், 15 ஜூன், 2022

வண்ணத்துப் பூச்சி - கவிதை

  வண்ணத்துப்  பூச்சி - கவிதை 

——————————————————————-


பாட்டுப்  போட்டியும்

பேச்சுப் போட்டியும்

ஓட்டப் போட்டியும்

உற்சாகத் தருணங்கள்


படங்கள்  வரைந்து 

பாராட்டு பரிசுகள் 

பரத நாட்டிய

ஆடை அணிகலன்கள்


எத்தனை வண்ணங்கள்

இருந்த பருவம்


காலம் வந்ததும் 

கணவன்  வந்ததும் 

குடும்பம்  வேலை

குழந்தை வந்ததும் 


ஒவ்வொரு வண்ணமாய் 

உதிர்ந்து போனதால்

வண்ணம் தொலைத்தது

வண்ணத்துப் பூச்சி

————நாகேந்திரபாரதி

 My Poems in Tamil and English  


3 கருத்துகள்:

மேன்மை தரும் மன்றம் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு

 மேன்மை தரும் மன்றம் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு ------------------------------------------------------------------------------------...