வியாழன், 29 ஏப்ரல், 2021

தூது - குறுங்கவிதைகள் -2

 தூது - குறுங்கவிதைகள் -2

------------------------------------------------

கரும்பு வில்லின் குறிப்பை 

புரிந்து செல்வாய் 

கிளியே 

-----

ஏக்க மூச்சின் வெப்பம் 

ஏந்திச் செல்வாய் 

காற்றே 

-------

கண்ணீர் துளிகள் கனத்தை 

கடத்திச் செல்வாய் 

நதியே 

---------

மயங்கிச் சேர்ந்த மனதை 

திரும்பக் கொணர்வாய் 

மதியே 

----------

இருண்டு கிடக்கும் வாழ்வில் 

வெளிச்சம் சேர்ப்பாய் 

கதிரே 

----------

---------------------------நாகேந்திரபாரதி 

My E-books in Tamil and English 


2 கருத்துகள்:

மரம் பேசுகிறேன் - கவிதை

 மரம் பேசுகிறேன் - கவிதை  ------------------------------------------------ (ஜூன் 5 , சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி பைந்தமிழ் ( greentamil.in )...