பிடித்ததும் பிடித்தது -கவிதை
-----------------------------------------------------------
நடந்து கொண்டிருந்தோம்
நாங்கள்
தூறிக் கொண்டிருந்தது
மேகம்
தடுக்கி விழப் பார்த்தேன்
நான்
தாங்கிப் பிடித்தாள்
அவள்
யார் யாரைப்
பிடித்துக் கொண்டிருந்தோம்
உள்ளுக்குள்
பெய்யெனப் பெய்யும் மழை
———————-நாகேந்திர பாரதி
அருமை
பதிலளிநீக்கு