ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

ம் முதல் ம் வரை - கவிதை

 ம் முதல் ம் வரை - கவிதை 

------------------------------------------------

(நவீன விருட்சம் கவியரங்கம் - 27/2/21)


பிறந்தும் தவழ்ந்தும் எழுந்தும் 

நடந்தும் ஓடியும் ஆடியும் 


படித்தும் தேர்வும் முடித்தும் 

வேலையும் சேர்ந்தும் சோர்ந்தும் 


காதலும்   விழுந்தும் எழுந்தும் 

மணந்தும் மக்களும் பெற்றும் 


உறவும் நட்பும் சேர்ந்தும் 

பெற்றதும் பெற்றதும் மற்றும் 


வரவும் செலவும் நடந்தும் 

இரவும் பகலும் கடந்தும் 


கனவும் நனவும் கலந்தும் 

நரையும் திரையும் சேர்ந்தும் 


 கிடந்தும் படுத்தும் நோயும் 

சேர்ந்தும் சோர்ந்தும் உழன்றும் 


காலம் கோலம் நினைந்தும் 

கண்ணும் நீரும் கலந்தும் 


இன்பம் துன்பம் துறந்தும் 

இறக்கும் உயிரும் பறக்கும் 

-------------------------------------நாகேந்திரபாரதி 

My E-books in Tamil and English 3 கருத்துகள்: