ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

என்றும் இளமை - கவிதை

 என்றும் இளமை - கவிதை 

--------------------------------------------------

அவள் கண்ணில் கீழ் கருவளையம் வந்தாலும் 

அந்தக் கண்ணுக்குள் 

குதிக்கின்ற குறும்பில் 

என்றும் இளமை 


அவள் கன்னத்தில் சுருக்கங்கள் வந்தாலும் 

அந்தக் கன்னத்தில் 

குழிகின்ற சிரிப்பில் 

என்றும் இளமை 


அவள் நாசியில் மூச்சு தடுமாறினாலும் 

அந்த நாசிமேல் 

சிவக்கின்ற கோபத்தில் 

என்றும் இளமை 


அவள் இதழோர ஈரங்கள் உலர்ந்தாலும் 

அந்த இதழ்களில் 

நெளியும் வெட்கத்தில் 

என்றும் இளமை 


அவள் விரல்களில் நரம்புகள் தெரிந்தாலும் 

அந்த விரல்களின் 

மென்மைப் பதட்டத்தில் 

என்றும் இளமை 


அவள் பாதங்களில் தளர்ச்சி தெரிந்தாலும் 

அந்த பாதங்களின் 

காலடி ஓசையில் 

என்றும் இளமை 


அவள்  பார்வையின் கூர்மை குறைந்தாலும் 

அந்த பார்வையின் 

நேசக் கண்ணீரில் 

என்றும் இளமை 

----------------------------------------------------நாகேந்திர  பாரதி 

My E-books in Tamil and English 


2 கருத்துகள்: