வியாழன், 19 மார்ச், 2020

இயற்கையின் ரகசியம் - கவிதை

இயற்கையின் ரகசியம் - கவிதை
-----------------------------------------------------
வளர்வதும் தேய்வதுமாய் வானத்திலே
 வந்து வந்து போகின்ற
 நிலவின் ஒளி

மலர்வதுவும் விழுவதுமாய் செடியினிலே
வந்து வந்து போகின்ற
 பூவின் வாசம்

பக்கத்திலும் தூரத்திலுமாய் பாதையிலே
வந்து வந்து போகின்ற
 பறவைச் சப்தம்

இயற்கையின் ரகசியமாய் உலகத்திலே
வந்து வந்து போகின்ற
வைரஸ் தாக்கம்

பிறவிகளின் தொடர்ச்சியாய் வாழ்க்கையிலே
வந்து வந்து போகின்ற
இன்ப துன்பம்
--------------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

6 கருத்துகள்:

  1. துன்பம் நமக்கு வரலாம்... உலகிற்கு கூடாது...

    பதிலளிநீக்கு
  2. வைரமுத்து வரிகளும் ஞாபகம் வந்தது...

    பதிலளிநீக்கு
  3. இன்பம் துன்பம் வாழ்கின் இயல்பு ... வைரஸ் தாக்கமோ இயற்கையின் பிறழ்வு ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு