ஞாயிறு, 15 மார்ச், 2020

தமுக்கம் மைதானம் - கவிதை

தமுக்கம் மைதானம் - கவிதை
------------------------------------------------
மதுரைத் தமுக்கம்
மாலாக மாறுகிறதா

முதன் முதல் சுற்றிய 
பொருட் காட்சிக் கடைகளும்

முதன் முதல் சாப்பிட்ட
டெல்லி அப்பளமும்

முதன் முதல் ஏறிய
ராட்சத ராட்டினமும்

முதன் முதல் பார்த்த
திறந்த வெளித் திரைப்படமும்

பிரிகின்ற காதலியை
ஏற்றிச் செல்லும் ரெயில் போல

வணிகப் பெரு வளாகத்தில்
ஏறிப் போய் மறைந்திடுமா
-----------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

7 கருத்துகள்:

 1. தமுக்கம் மைதானத்தை அப்படியே பாதுகாத்து வந்திருக்க வேண்டும். மதுரையில் யாரிடமிருந்தும் எதிப்பு கிளம்பாதது வேதனையாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
 2. கவிதையில் ஆதங்கம்.

  தமுக்கம் மைதானம் - இதுவும் போகப் போகிறதா? சோகம்.

  பதிலளிநீக்கு
 3. சிறப்பு
  பாராட்டுகள்

  கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!
  http://www.ypvnpubs.com/2020/03/blog-post_15.html

  பதிலளிநீக்கு
 4. பிரிகின்ற காதலியை
  ஏற்றிச் செல்லும் ரெயில் போல .... ஆஹா நல்ல உவமை !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு