வெள்ளி, 13 மார்ச், 2020

சில்லறைச் சிரமங்கள் - கவிதை

சில்லறைச்  சிரமங்கள்   - கவிதை
---------------------------------------------------
ஒரு ரூபாய்க் காசை
வீசி எறிகிறான்  பிச்சைக்காரன்

ஐந்து ரூபாயாவது
போட வேண்டுமாம்

இரண்டாயிரம் ரூபாய் நோட்டை
திருப்பிக் கொடுக்கிறான் கடைக்காரன்

ஐநூறு ரூபாயாவது
கொடுக்க வேண்டுமாம்

ஐந்தும் ஐநூறும் கேட்டால்
சலித்துக் கொள்கிறான்   வங்கிக் காசாளன்

சில்லறை ரூபாயின்
சிரமங்கள் நமக்குத் தான்
--------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

6 கருத்துகள்:

 1. வணக்கம்

  உண்மையான வரிகள் நானும் பல நேரங்களில் சந்தித்து இருக்கின்றேன்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 2. சிக்கலிலே மாட்டிவிடும் சில்லரையை பற்றி அருமையாக கவிதை !! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு