புதன், 22 ஜனவரி, 2020

புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சி
------------------------------------
கண்காட்சி என்று பெயர்
வைத்து விட்டதால் தானோ

கண்களால் பார்த்து விட்டு
வாங்காமல் போகிறார்கள்

விற்பனை விழா என்று பெயர்
வைத்து விட்டால் மட்டும்

வேக வேகமாய்ப் புத்தகங்கள்
வாங்கி விடுவார்களா என்ன

இலவசமாய்க் கைபேசியில்
இறக்கி வைத்துக் கொண்டு
படிக்காமல் இருப்பவர்கள்
-------------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

4 கருத்துகள்:

 1. டெல்லி அப்பள விற்பனை படுஜோர் என்று கேள்விப்பட்டேன்...!

  பதிலளிநீக்கு
 2. வாசிப்பு என்பது பிறவியிலேயே இறைவன் கொடுக்கும் வரம் நண்பரே

  பதிலளிநீக்கு
 3. உண்மைதான். இப்போதெல்லாம் புத்தகப் பிரதிகனை குறைவாகத்தான் அச்சடிக்கிறார்கள். வாசிப்பு வீழ்ந்து வருகிறது என்பதை ஏற்கத்தான் வேண்டும்.

  நமது வலைத்தளம் : சிகரம்
  இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

  பதிலளிநீக்கு
 4. உன்மைதான் நன்பரே!. நான் வாங்கியா சில புத்தகங்கள் இன்னும் பிரிக்காமலே இருக்கிறது

  பதிலளிநீக்கு