புதன், 5 ஜூன், 2019

கானல் காட்சி - கவிதை

கானல்  காட்சி - கவிதை
--------------------------------------
புத்தகப் பையும்
வகுப்பறைச் சப்தமும்

கோயில்  குளமும்
திருவிழாக் கூட்டமும்

கண்மாய்க் கரையும்
வயக்காட்டு வரப்பும்

புழுதிக் காற்றாய்
பறக்கும் பொழுது

கானல் நீராய்க்
கரையும் காட்சி
----------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

2 கருத்துகள்: