செவ்வாய், 16 அக்டோபர், 2018

வாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை


வாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை
----------------------------------------
இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க. சொந்தக்காரங்க உலகம், நண்பர்கள் உலகம், ஆபிஸ் உலகம்னு.
இந்த சொந்தக்காரங்க உலகத்திலே குழந்தைங்க போட்டோ , வீடியோ போட்டுக்கிட்டு இருப்பாங்க.  அவங்க பெண் குழந்தையோட டான்ஸ் வீடியோ . அது பாதி இறங்கிக்கிட்டு இருக்கிறப்போவே பதில் வந்திடும் . . ' பிரமாதமா ஆடுற, வருங்காலத்தில் பத்மா மாதிரி வருவா'.
அதே மாதிரி பசங்க கராத்தே வீடியோ வரும். அதுவும் இறங்க ஆரம்பிச்ச உடனேயே பதில் போட்டுடுவாங்க. ' சூப்பர் , வருங்கால ஜாக்கி சான் '.  பாக்கணும்கிற அவசியமே இல்லை. பதில் தான் முக்கியம். அனுப்புனவங்களும் சந்தோசம் ஆயிடுவாங்க.
அதே மாதிரி நம்ம கவிதை , கட்டுரை, லிங்க் அனுப்பினா, பட்டுன்னு பதில் வந்திடும். ' அருமை' ன்னு. ' என்ன அருமை'ன்னு கேட்டா உடனே , ஆப் லைனிலே போயிடுவாங்க. படிச்சிருந்தாத்தானே  பதில் போடுவாங்க.
இதே மாதிரி வயசான சில பேரு எல்லாத்துக்கும் ' சூப்பர்' ன்னு  ஒரே பதில் தான் தான்.
'என் பொண்ணு பர்ஸ்ட் கிளாஸ்லே பாஸ் பண்ணிட்டா ' - 'சூப்பர்'
'என் பையன் கராத்தேயிலே பிளாக் பெல்ட் '- 'சூப்பர் '
'எங்க பெரிய தாத்தா இறந்து போயிட்டாரு ' - ' சூப்பர்'
என்ன இது.. எங்க தாத்தா மேலே இவருக்கு என்ன பகைன்னு விசாரித்த பிறகு தெரிய வந்தது . அவரு போன் மெமோரியிலே 'சூப்பர்'ன்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்காரு. எதையும் படிக்கிறதே இல்ல. எல்லாத்துக்கும்  மெமரி பேஸ்ட் தான்.

இப்படிப் போகுது சொந்தக்காரங்க வாட்ஸ் அப் உலகம். ஆபிஸ் நண்பர்கள் உலகம். அது தனி உலகம். 'ப்ரோக்ராம் சந்தேகம், வேலை வாய்ப்புன்னு ' ஓடிக்கிட்டு இருக்கும்.
'இப்' புக்கு பிறகு இருக்கிற புள்ளியை எடுத்துடு. ப்ரோக்ராம் ஒர்க் ஆகும் '
'செர்வெரை டௌன் பண்ணி பூட் பண்ணு, ஒர்க் ஆகும் ' - இப்படி ஒரு பக்கம்.
மறு பக்கம், ஏதாவது வேலை பத்தி போஸ்ட் ஆகிட்டா, உடனே ரெஸ்யூமை அப்டேட் பண்ணுறது. ' சி பிளஸ் பிளஸ் அஞ்சு வருஷம், டி பிளஸ் பிளஸ் ஏழு வருஷம் , பிளஸ் பிளஸ் 10  வருஷம்’னு அடிச்சு விடுறது. மொத்தம் கூட்டுனா , அவங்க வயசை விட அதிகமாக வந்துடும்.
ஹெச் ஆருக்கு தெரியாதா, நம்ம பசங்க லட்சணம். வேலையை யாருக்காவது கொடுத்துட்டுதான் , சைட்டிலே போஸ்ட் பண்ணுவாங்க. உடனே பதில் போட்டுடுவாங்க . 'சாரி , வேகன்ஸி பில் அப் ஆயிடுதுன்னு'


ஆபிஸ் நண்பர்கள் உலகம் இப்படின்னா, வேற நண்பர்கள் உலகம் வேற மாதிரி. இதையும் மூணா பிரிக்கலாம்.  காதல் உலகம் , ஆன்மீக உலகம், அரசியல் உலகம்.
காதல் உலகத்திலே, முதல் நாள் காதலிச்சு அடுத்த நாள் கல்யாணம் பண்ணி அதுக்கு அடுத்த நாளே விவாக ரத்து அப்ளை பண்ணிடுவாங்க. ரெம்ப வேகமான உலகம்.

ஆன்மீக உலகத்திலே அனுப்புவாங்க அட்வைஸ். ' என்ன வந்தாலும், அப்படியே ஏத்துக்கணும். அப்பத்தான் நம்ம ஆன்மா விரிவடையும் ' நம்மளும் அப்படியே ஏத்துக்கிட்டு என்ன வந்தாலும், நம்ம டைனிங் டேபிள் மேலே என்ன வந்தாலும் இட்டிலி, தோசை , பூரின்னு எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு சாப்பிட்டுடுவோம். நம்ம ஆன்மா இல்லே  இடுப்பு தான் விரிவடைஞ்சுக்கிட்டே போகும்.
  
இந்த அரசியல் உலகத்திலே, ஒரே அடி தடி தான்.. எழுத்திலே தான். அந்த தலைவர் சரி இல்லே, இவன் சரி இல்லேன்னு , ஒரே திட்டுதான். . நம்ம சும்மா இருந்தாலும், வம்புக்கு இழுப்பாங்க. ' நீங்க என்ன நினைக்கிறீங்க. ' ' நாம ஒண்ணும் நினைக்கலேன்னா நமக்கு திட்டு. '  ' உனக்கு ஆரோக்கிய அரசியல் தெரியலை, நீ ஒரு கூமுட்டை' ன்னு சொல்லிடுவாங்க. நமக்கும் கோபம் வந்துடும். அது எப்படி கூமுட்டைன்னு சொல்லலாம். ஒரு கோழி முட்டை , வாத்து முட்டைன்னு சொல்லி இருந்தாலாவது புரிஞ்சிருக்கும். அது என்ன கூமுட்டை. நம்ம கோபமா , வர்ற மெசேஜ் எல்லாமே அப்புறம் படிச்சுக்கலாம்னு மெமரி யிலே ஏத்திடுவோம். இதிலே நம்ம போன் மெமரி காலி ஆகி, எல்லா மெஸ்ஸஜும் காணாம போயிடும். 'ரெம்ப நல்லது' ன்னு பார்த்தா, நம்ம போன் காண்டாக்ட் லிஸ்டும் அவுட்டு.

'யாரு போன் பண்ணுறாங்க . தெரியலே '
எடுத்து ' ஹல்லோ, யாரு ' ன்னு கேட்டதும் அவ்வளவுதான்.
' என்ன, நான் யாரா, குரலை மறந்தாச்சா, அவ்வளவு தூரம் ஆகிப் போச்சா '  ன்னு கேட்டு போனை கட் பண்ணிட்டாங்க. . யாருன்னு தலை  முடியை பிச்சுக்கிறேன். யாரா  இருக்குங்க  .
 ------------------------------------நாகேந்திர பாரதி7 கருத்துகள்:

 1. நம்ம கவிதை, கட்டுரைகளுக்கு அருமை என்று கருத்துரை தந்தால் ? நாமலும் போயி அருமை'னு சொல்லி விட்டு போகலாமே...

  ஒரு பழமொழி ஞாபகம் வருது...
  "முன் கை நீண்டால் முழங்கை நீளும்"

  பதிலளிநீக்கு
 2. அருமை!!! சூப்பர்!!!
  கட்டுரையை உண்மையிலேயே படிச்சுட்டேங்க...

  பதிலளிநீக்கு
 3. நல்ல வேளை இந்த வியாதிக்கு நான் ஆட்படலை

  பதிலளிநீக்கு
 4. உண்மை
  வாட்ஸ் அப்பிற்கு வரும் செய்திக் குவியலால், மெமெரி காலியாகித்தான் போய்விடுகிறது

  பதிலளிநீக்கு
 5. உண்மையைப் பகிர்ந்தவிதம் அருமை. நான் முடிந்தவரை வாட்ஸ்அப் பக்கம் போவதில்லை. ஆதலால் எனக்கு தொல்லை குறைவு என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. வாட்ஸப்பில் வருகிற தகவல்கள்
  நிறைய தவறானதாயும் இருக்கின்றதுதான்/.

  பதிலளிநீக்கு