வெள்ளி, 14 செப்டம்பர், 2018

நிழல் நடமாட்டம்

நிழல் நடமாட்டம்
--------------------------------
சுருங்கியும் விரிந்தும்
நம்மோடு சேர்ந்து
நடமாடும் நிழல்கள்

வெயிலிலும் மழையிலும்
தரையில் அடிபட்டு
வேதனைக் குரலில்
வெம்பும் நிழல்கள்

ஓடவும் முடியாமல்
ஒளியவும் முடியாமல்
நிழல்களின் நடமாட்டம்
---------------------------------------- நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

4 கருத்துகள்: