புதன், 4 ஜூலை, 2018

விவசாயி கனவு

விவசாயி கனவு
-----------------------------
வானம் பார்த்ததும்
வயலை உழுததும்

விதை விதைத்ததும்
நாத்து நட்டதும்

களை எடுத்ததும்
மருந்து அடித்ததும்

தண்ணீர்   பாய்ச்சியதும்
தடவிக் கொடுத்ததும்

கதிர் அறுத்ததும்
அடித்துத் தூத்தியதும்

படப்பு போட்டதும்
பயறு சாப்பிட்டதும்

நெல் அவித்ததும்
காயப் போட்டதும்

வண்டி ஏற்றியதும்
அரைத்து முடித்ததும்

தவிடும் உமியும்
குவித்து எடுத்ததும்

அரிசி பொங்கியதும்
அம்மன் கும்பிட்டதும்

வீட்டுச் செலவுக்கு
விற்று வாங்கியதும்

கல்யாணம் நடத்தியதும்
திருவிழா கண்டதும்

காலம் ஓடியதும்
வானம் பொய்த்ததும்

குடிக்கும் நீருக்கே
அலையாய் அலைந்ததும்

களைத்து ஓய்ந்ததும்
விற்று விலகியதும்

கிராமம் விட்டு
நகரம் வந்ததும்

கான்கிரீட் கட்டிடத்தில்
காவலுக்கு அமர்ந்ததும்

ரேஷன் அரிசிக்கு
கியூவில் நின்றதும்

மஞ்சப் பையிலே
வாங்கி வந்ததும்

பொங்கிச் சாப்பிட்டு
புரண்டு படுத்ததும்

கனவில்  வந்திடும்
கிராமக் காட்சியில்

நெல்லுப் பயிரும்
சேர்ந்து அழுதிடும்
----------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக