செவ்வாய், 3 ஜூலை, 2018

வீட்டுத் திண்ணை

வீட்டுத் திண்ணை
------------------------------------
நெல்லு மூட்டையை
இறக்கி வைத்த திண்ணை

காய்கறிக் காரியிடம்
பேரம் பேசிய திண்ணை

ஊர்கோலச் சாமிக்குக்
காத்திருந்த திண்ணை

தீபாவளிப் பட்டாசு
பரப்பி வைத்த திண்ணை

கோலக்  கலர்ப் பொடி
கொட்டியிருந்த திண்ணை

ஊர்ப் புரணியெல்லாம்
அளந்து விட்ட  திண்ணை

திண்ணை இருக்கிறது
தெருவும் இருக்கிறது

பேசிச் சிரித்த
பெரியவர்கள் இல்லை
---------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

3 கருத்துகள்:

 1. //பேசிக் கிடந்த
  பெரியவர்கள் இல்லை//

  பெரியவர்கள் இல்லை. இன்றைய சிறுசுகள் அதைச் சீந்துவது இல்லை.

  மனதைக் கவர்ந்த கவிதை.

  பதிலளிநீக்கு
 2. ​நினைவுகள் மோதும் மனம். அலையடிக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. "திண்ணை இருக்கிறது
  தெருவும் இருக்கிறது

  பேசிச் சிரித்த
  பெரியவர்கள் இல்லை"

  நல்ல கவிதை..

  பதிலளிநீக்கு