வெள்ளி, 27 ஜூலை, 2018

காலக் கணக்கு

காலக் கணக்கு
-------------------------
ஒரு கூட்டுத் தேன் சேர்க்க
எத்தனை பூக்கள்
எத்தனை காலம்
தேனீக்கட்கு

ஒரு புற்று மண் சேர்க்க
எத்தனை ஓட்டம்
எத்தனை காலம்
எறும்புகட்கு

பணமும் புகழும்
பதவியும் சேர்க்க
எத்தனை அவசரம்
மனிதர்கட்கு
-------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

5 கருத்துகள்:

 1. அவசர உலமல்லவா நண்பரே இது...?

  பதிலளிநீக்கு
 2. தேனி, எறும்பு, மனிதன் எலோருக்கும் எத்தனை எத்தனை காலக்கணக்கு

  பதிலளிநீக்கு
 3. தேனீயோ ஏறும்போ நேரம் பார்த்து வேலை செய்வதில்லை. மனிதன் பணம் பார்க்காமல் வேலை செய்ததில்லை!

  பதிலளிநீக்கு
 4. சிந்திக்கவைக்கும் சிறந்த பாவிது

  பதிலளிநீக்கு