செவ்வாய், 24 ஜூலை, 2018

விடுதலை மனிதர்

விடுதலை மனிதர்
------------------------------
கூட்டை விட்டு வந்து விட்ட
வண்ணப் பூச்சி அழகு

ஓட்டை விட்டு வந்து விட்ட
கோழிக்  குஞ்சு அழகு

கோபம் விட்டு
பயத்தை விட்டு

பொறாமை விட்டு
பேராசை விட்டு

இன்னும் பல தீமைகளைச்
சேர்த்து வைத்த செயற்கைக் கூட்டை

உடைத்து விட்டு வெளியே வந்த
மனிதர் எல்லாம் அழகு
----------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

4 கருத்துகள்: