திங்கள், 2 ஜூலை, 2018

சோறும் சுவையும்

சோறும் சுவையும்
---------------------------------
சாணியைப் போட்டுவிட்டு
நகர்கின்ற மாடுகள்

கூரையில் ஒட்டிக்கொண்டு
காய்கின்ற வரட்டி

பிய்ந்தபடி அடுப்புக்குள்
மூட்டுகின்ற நெருப்பு

மண்பானை பொங்கி
வழிகின்ற கஞ்சி

மண்ணும் மாடுமாய்
மணக்கின்ற சோறு
-------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com


4 கருத்துகள்: