ஞாயிறு, 1 ஜூலை, 2018

கண்ணீரும் கதை சொல்லும்

கண்ணீரும் கதை சொல்லும்
-------------------------------------------------
காத்திருந்த கதை சொல்லும்  - காதல்
பூத்திருந்த கதை சொல்லும்

பார்த்திருந்த கதை சொல்லும் - காதல்
படித்திருந்த கதை சொல்லும்

சேர்த்திருந்த கதை சொல்லும் - காதல்
செழித்திருந்த கதை சொல்லும்

நேற்றிருந்த கதை சொல்லும் - காதல்
இன்றிருக்கும் கதை சொல்லும்

கடந்திருந்த கதை சொல்லும் - காதல்
கண்ணீரும் கதை சொல்லும்
---------------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

3 கருத்துகள்:

  1. நல்லது. காதலே கதையாகிப் போகாமல் இருந்தால் சரி.

    பதிலளிநீக்கு
  2. இன்றிருக்கும் காதல் பற்றி நாளை என்ன கதை வருமோ? அருமையா இருக்கு.

    பதிலளிநீக்கு