செவ்வாய், 22 மே, 2018

கண்மாய்க் கரை

கண்மாய்க் கரை
------------------------------------
கண்மாயைப் பற்றிக்
கவிதை எழுதச் சொன்னார் நண்பர்

முன்பு போல் இல்லை
கண்மாயும் கரையும்

சகதி இருந்திருந்தால்
வழுக்கி விழுந்திருக்கலாம்

தண்ணீர் இருந்திருந்தால்
முங்கி எழுந்திருக்கலாம்

மரங்கள் அடர்ந்திருந்தால்
தேனடையைத் தேடியிருக்கலாம்

கட்டாந் தரையாகக்
கிடக்கின்ற  கண்மாயைப்

பார்க்காமலே இருந்திருக்கலாம்
பழைய நினைவுகளோடு
-----------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

3 கருத்துகள்:

 1. சகதி இருந்திருந்தால்
  வழுக்கி விழுந்திருக்கலாம்

  தண்ணீர் இருந்திருந்தால்
  முங்கி எழுந்திருக்கலாம்

  அருமை அருமை

  பதிலளிநீக்கு
 2. கண்மாய் எல்லாம் கட்டாந்தரையாகிப் போனதே என வருந்திய வாக்கியங்கள் மனதை வாட்டுகின்றன..

  பதிலளிநீக்கு