செவ்வாய், 15 மே, 2018

காற்றில் காகிதம்

காற்றில் காகிதம்
------------------------------
இந்த மரக்கிளையில்
ஒட்டிக் கொண்டது காகிதம்

மடித்துக் கிடந்த
காப்பித்தூள் நினைப்போடு

கட்டிக் கிடந்த
மூட்டையின் நினைப்போடு

அமுங்கிக் கிடந்த
புத்தகப்பை நினைப்போடு

அச்சடித்து வெளிவந்த
அழகின் நினைப்போடு

கூழாய்ப் பிசைந்த
ஆலையின் நினைப்போடு

ஓங்கி வளர்ந்திருந்த
ஊட்டி மர நினைப்போடு

இந்த மரக்கிளையில்
ஒட்டிக்கொண்டது காகிதம்
------------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

8 கருத்துகள்:

  1. உருவெடுத்த இடத்திற்கே போய் சேர்ந்து கொள்கிறது!


    பதிலளிநீக்கு
  2. நன்று! "ஒட்டிக்கொண்டது காகிதம் தன் பூர்வ ஜென்ம நினைப்போடு"

    பதிலளிநீக்கு
  3. இப்பலாம் பழசை யாருங்க நினைக்குறாங்க

    பதிலளிநீக்கு