உறவின் பிரிவு
-------------------------
அக்கறையாய்ப் பேசும்
அன்புப் பேச்சில்
அறிவின் ஆழமிருக்கும்
எப்போதாவது நிகழும்
அபூர்வச் சிரிப்பில்
ஆயிரம் அழகிருக்கும்
கண்ணாடிக்கு உள்ளிருந்து
பாசம் மட்டும் அல்ல
கோபமும் எட்டிப் பார்க்கும்
மரியாதை கொடுப்பதில்
மாற்றுக் குறைந்தாலோ
மவுனம் தொடர் ஆகும்
ஒவ்வொரு புது வருடமும்
அவர் தரும் டைரியில் தான்
ஆரம்பம் ஆகும்
இனி வரும் வருடங்களில்
அந்த டைரிகளும் இல்லை
அவரும் இல்லை
-----------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
-------------------------
அக்கறையாய்ப் பேசும்
அன்புப் பேச்சில்
அறிவின் ஆழமிருக்கும்
எப்போதாவது நிகழும்
அபூர்வச் சிரிப்பில்
ஆயிரம் அழகிருக்கும்
கண்ணாடிக்கு உள்ளிருந்து
பாசம் மட்டும் அல்ல
கோபமும் எட்டிப் பார்க்கும்
மரியாதை கொடுப்பதில்
மாற்றுக் குறைந்தாலோ
மவுனம் தொடர் ஆகும்
ஒவ்வொரு புது வருடமும்
அவர் தரும் டைரியில் தான்
ஆரம்பம் ஆகும்
இனி வரும் வருடங்களில்
அந்த டைரிகளும் இல்லை
அவரும் இல்லை
-----------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
பிரிவுத்துயர்,,,/
பதிலளிநீக்குஅடிமனதை இதமாய் வருடும் கவிதை.
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குஅருமை..
பதிலளிநீக்குரசித்தேன்
பதிலளிநீக்குஉறவின் பிரிவு வலியும் வேதனையும் கூட்டும் கவிதை.ந
பதிலளிநீக்கு