திங்கள், 19 மார்ச், 2018

பேர் தெரியாப் பெரியவர்கள்

பேர் தெரியாப் பெரியவர்கள்
--------------------------------------------------
தொப்பியோடும் பூட்ஸோடும்
போலீஸ் உடுப்போடும்
ஏட்டுத் தாத்தா

அம்மன் சாமி தெரு உலாவில்
முன்னாடி நடந்து வரும்
பேஷ்கார் தாத்தா

மதுரைக்கும் சிவகங்கைக்கும்
கிரிமினல் கேஸ் கட்டோடு
வக்கீல் தாத்தா

கனத்த சிரிப்போடும்
கலகலப்புக் குரலோடும்
மீசைக்காரத் தாத்தா

நெல்லு வண்டி ஏத்தி
பக்கத்தூரு சந்தை போகும்
நெல்லுத் தாத்தா

சிக்கல் ஊரில் இருந்து
விடுமுறைக்கு வருவதனால்
சிக்கல் தாத்தா

கையை வீசி வீசி
வேகமாக நடப்பதால்
கைவீச்சுத் தாத்தா

கணக்கு வழக்கைக்
கணக்காகப் பார்ப்பதால்
கணக்குத் தாத்தா

சிரிக்கப் பேசி
விளையாட்டுத் தோழனாய்
காமெடித்  தாத்தா

அடையாளப் பட்டத்தால்
தாத்தாக்கள்  தெரிந்தாலும்
பேர் மட்டும் தெரியாது
------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

6 கருத்துகள்:

  1. எத்தனை எத்தனை தாத்தாக்கள் உங்கள் கவிதையிலே. கிருஸ்துமஸ் தாத்தா, காந்தித் தாத்தா எல்லாம் வருடத்திற்கு ஒரு முறை வருகிறார்கள். இவர்கள் அடிக்கடி வருகிறார்களோ?

    பதிலளிநீக்கு