ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

கீத்துக் கொட்டகை

கீத்துக் கொட்டகை
------------------------------------
மண்ணு ரோட்டில் நடந்து போய்
தார் ரோட்டில் பஸ் பிடித்து

பக்கத்து டவுனில் இறங்கி
பன்னும் டீயும் சாப்பிட்டு

கீத்துக் கொட்டகை கியூவில் நின்று
சிவப்புச் சீட்டை வாங்கிக் கொண்டு

பாதி கிழித்த சீட்டோடு
மண்ணைக் குவித்து உட்கார

அழுக்குத் திரையில் வெளிச்சம் பாயும்
மனத் திரையில் படம் ஓடும்
----------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

5 கருத்துகள்: