செவ்வாய், 5 செப்டம்பர், 2017

வலித் துணை

வலித் துணை
------------------------
வளர்கின்ற பருவத்தில்
வருகின்ற வலிகட்கு
பெற்றோர் துணை

அலுவலக வேலைகளில்
ஆகின்ற வலிகட்கு
நண்பர் துணை

குடும்பச் சுமைகளிலே
கூடுகின்ற வலிகட்கு
இணையே துணை

உற்றோர்கள் மறைவினால்
உண்டாகும் வலிகட்கு
சுற்றம் துணை

வயதான பின்னாலே
வாட்டுகின்ற வலிகட்கு
தானே துணை
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

5 கருத்துகள்:

 1. வயதானகாலம் வலிமிகுந்ததாகத்தான் இருக்குமோ.. நினைக்கவே பயம்..

  பதிலளிநீக்கு
 2. துணைகளுக்கு ஆளாகும் மனது,,,,,,,
  மனதுக்குப்பிடித்த துணையும்
  இதமான துணையும் வாய்த்துவிட்டால்
  நம்மை விட பாக்கிய சாலிகள் யாரும்
  இருக்கமுடியாது.

  பதிலளிநீக்கு