வெள்ளி, 1 செப்டம்பர், 2017

வானம் வறக்குமேல் ..

வானம் வறக்குமேல் ..
-----------------------------------
ஊடு பயிரோடு
நெல்லும் வளர்ந்தது

ஆடு மாடோடு
வாழ்க்கை நடந்தது

படப்பு கட்டும்போது
பயறும் கடலையும்

கருப்பு சாமிக்கு
ஒயிலும் படையலும்

காணாமல் போனது
எல்லாமே இப்போது
-----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

7 கருத்துகள்:

 1. //காணாமல் போனது
  எல்லாமே இப்போது//
  நாமும் காணாமல் போவதற்கு முன் வாழ்ந்து விடுவோம்.

  பதிலளிநீக்கு
 2. எதையும் கண்டு கொள்ளாத நம் பொறுப்பாளார்கள்!

  பதிலளிநீக்கு
 3. காலமாற்றத்தில் பலது காணமல் போகின்றது நண்பா! நலம் தானே ?

  பதிலளிநீக்கு
 4. இப்பொழுது நகர்ப்புறத்தில்தான் மக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்.. ஆனா கிரமப்புறங்களுக்கு சுற்றுலாச் செல்ல மட்டுமே விரும்புகின்றனர்.. அப்போ எப்படி கிராமமும் வயலும் இருக்கும்?

  பதிலளிநீக்கு
 5. நன்றாக இருக்கிறது!

  கீதா: கருப்பு சாமிக்கு
  ஒயிலும் படையலும்

  காணாமல் போனது
  எல்லாமே இப்போது// முதலில் ஒயிலும் என்பதனை ஒயினும் என்று வாசித்துவிட்டேன்...ஒயின் கூட வைப்பதைப் பார்த்திருக்கிறேன் அதனால் இருக்குமோ என்னவோ...ஹாஹாஹா அப்புறம் சரியாக வாசித்தேன்...கிராமத்தின் அழகு தொலைந்துதான் வருகிறது..எல்லோரும் நகரத்தில் அல்லவா!!

  பதிலளிநீக்கு