புதன், 30 ஆகஸ்ட், 2017

தெப்பக் குளம்

தெப்பக் குளம்
----------------------------
மூழ்கும் களிமண் பிள்ளையாரின்
வயிற்றுக் காசை
சுரண்டி எடுப்பதைப்
பார்த்திருக்கிறோம்

நடுக்குளச் சகதியில்
கால் மாட்டிக் கத்தியதைப்
பார்த்திருக்கிறோம்

மண்டபத்தில் இருந்து
பயத்தோடு குதித்ததைப்
பார்த்திருக்கிறோம்

தெப்பம் ஓடி மட்டும்
பார்த்ததில்லை
அந்தத்  தெப்பக்குளத்தில்
--------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

3 கருத்துகள்: