வியாழன், 13 ஜூலை, 2017

காலக் கடவுள்

காலக் கடவுள்
----------------------------
இளமை என்றும்
முதுமை என்றும்

பிறப்பு என்றும்
இறப்பு என்றும்

இன்பம் என்றும்
துன்பம் என்றும்

காதல் என்றும்
நட்பு என்றும்

கடமை என்றும்
உரிமை என்றும்

நன்மை என்றும்
தீமை என்றும்

உண்மை என்றும்
பொய்மை என்றும்

இயற்கை என்றும்
செயற்கை என்றும்

கிராமம் என்றும்
நகரம் என்றும்

வீடு என்றும்
நாடு என்றும்

இரவு என்றும்
பகல் என்றும்

நேற்று என்றும்
நாளை என்றும்

இன்று என்றும்
இப்போது என்றும்

இரண்டு இரண்டாய்ப்
பிரித்துப் போட்டு

காட்டிச் செல்லும்
காலக் கடவுள்
---------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

7 கருத்துகள்:

  1. வசந்த மாளிகை திரைப்படத்தில் வரும் நினைத்து வாட ஒன்று
    மறந்து வாழ ஒன்று என்ற வரிகள் நினைவிற்கு வந்தன.

    பதிலளிநீக்கு
  2. காலமே கடவுளாக மாறிவிட்டது....

    பதிலளிநீக்கு