செவ்வாய், 25 ஜூலை, 2017

பிக் பாஸ் புரணி - நகைச்சுவைக் கட்டுரை

பிக் பாஸ் புரணி - நகைச்சுவைக் கட்டுரை
----------------------------
இந்த பிக்பாஸ் ப்ரோக்ராம்  பாக்க ஆரம்பிச்சப்புறம் வீட்டிலே பெரிய பிரச்சினையா இருக்குங்க. நம்ம பாட்டுக்கு நிதானமா ஒன்பது மணிக்கு மேலே எந்திரிச்சிட்டு இருந்தோம். இப்ப என்னடான்னா எட்டு மணிக்கே ஏதோ 'ஜிங்கு ஜக்கா, ஜங்கு ஜிக்கா ;' ன்னு ஏதோ ஒரு பாட்டை எட்டு மணிக்கெல்லாம் போட்டு அலற வச்சிடுறாங்க. நம்ம எந்திரிச்சு ஆடணுமாம். ஒவ்வொரு நாளையும் உற்சாகமா ஆரம்பிக்கணுமாம். நானும் எந்திருச்சு ஆடிப் பார்த்தேன். இடுப்பு புடிச்சுக்கிட்டது தான் மிச்சம். அடுத்த நாள்லே இருந்து பத்து மணிக்கு எந்திரிக்கிறதே  கஷ்டமா ஆயிடுச்சு .

அப்புறம் இந்த சமையல் வேலை இருக்கு பாருங்க. 'சினேகன் இருக்கார் பாருங்க. எவ்வளவு அருமையா சமைக்கிறாரு. இதுக்காகவே அவரை யாரும் எலிமினேட் பண்ணுறது இல்லே. திருப்பி திருப்பி லீடரா ஆக்கிறாங்க. நீங்களும் சமையல் பண்ணிப் பாருங்க' ன்னு சொல்றாங்க. நான் சமைக்க ரெடி. இவங்க சாப்பிட ரெடியா. அப்புறம் சாப்பிட்டு வயித்து வலி அது இதுன்னு சொல்லக் கூடாது. ஆமா .

முந்தியெல்லாம் நம்ம சொந்தக்காரங்க நண்பர்கள் புரணிகள் தான் வீட்டிலே ஓடிக்கிட்டு இருக்கும். இப்ப ஒரு நல்லது நடந்திருக்கு. அதையெல்லாம் மறந்திட்டு  ஜூலி, காயத்ரி, ஓவியா , ஆரவ், சக்தி புரணி தான் வீட்டிலே நாள் புல்லா    ஓடிக்கிட்டு இருக்கு. அடுத்த வாரம் யாரு எலிமினேட் ஆவாங்கன்னு பெரிய சர்ச்சையே நடந்துக்கிட்டு இருக்கு. இதை வச்சு ஒரு பெரிய சூதாட்டமே நடக்கும் போலிருக்கு. கிரிக்கெட் சூதாட்டத்தை விட பிக் பாஸ் சூதாட்டம் பெருசா நடக்கும்னு தோணுது.


நைட் போடுறதையே திருப்பி காலையிலே மதியம்னு போடுறதாலே மக்கள் வேற சேனல் எதுவும் பார்க்க முடியிறது இல்லே. திருப்பி திருப்பி பார்க்கறப்போ புரணிகள் எல்லாம் இன்னும் நல்லா புரியறதுமத்த சீரியல் பார்த்து அழறதை விட இதை பார்த்து புரணி பேசறது ரெம்ப இன்டர்ஸ்டிங் ஆக இருக்கு .எல்லா டீவிகளிலும்  பிக் பாஸ் மாதிரி சூப்பர் பாஸ் , கிரேட் பாஸ் ன்னு ப்ரோக்ராம் போட்டாதான் மக்கள் கவனத்தைத் திருப்ப முடியும் . கமல் மாதிரி,  ரஜினி, அஜித், விஜய், சூர்யா ன்னு கூப்பிட்டு தொகுத்து வழங்கச் சொல்லலாம். சீரியல் ஆக்டர்கள் எல்லாம் இது மாதிரி வீட்டுக்குள் வந்துடலாம்.

உள்ளே இருந்தா படுத்துகிட்டு  உக்கார்ந்துக்கிட்டு  புரணி  பேசணும் ; வெளியே வந்தா சாப்பிட்டுக்கிட்டு  , நடந்துக்கிட்டு புரணி பேசணும். பிக் பாஸ் கூப்பிட்டா அடக்க ஒடுக்கமா போய் உக்கார்ந்து  எஸ் பாஸ், ஓகே பாஸ் சொல்லணும். அப்புறம் வந்து பிக் பாஸ் பத்தியே புரணி பேசணும். அவ்வளவுதானே. இதை பத்தி விலா வாரியா மீம்ஸ் போட்டு கலாய்க்கத்தான் சோசியல் மீடியா இருக்கே. அப்புறம் என்ன கவலை .

என்ன ஒண்ணு. அப்பப்போ வையாபுரி மாதிரி ஒவ்வொருத்தரா கேமரா முன்னாடி வந்து கண்ணைக் கசக்கிட்டு நிக்கறதை பாக்குறப்போ தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அம்மா, அப்பா, தாத்தா , பாட்டி , சித்தி, தங்கச்சின்னு இல்லாமே தெரியாதவங்க கூட சேர்ந்து இருக்கிறது கஷ்டம் தாங்க.

 சரி, அதை விடுங்க. நாம இந்த ப்ரோக்ராம் ரெகுலரா பார்த்து இந்த பிக் பாஸ் புரணியிலே நம்ம வீட்டிலே கலந்துக்கலேன்னா, நம்ம ஒய்ப் , புள்ளைங்க , அம்மா  அப்பா தாத்தா பாட்டிகளே நம்மளை எலிமினேஷன் லிஸ்டில் நாமினேட் பண்ணிடுவாங்க. மத்தியானம், மூணாவது தடவையா போயி பார்த்துக்கிட்டு ராயிஷா மாதிரி 'எஸ் , புரியுது  கரெக்ட்' ன்னு   கமெண்ட் குடுக்க ஆரம்பிச்சாச்சுங்க.
------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

10 கருத்துகள்:

 1. ஹா.. ஹா.. ஹா.. நல்லாத்தான் ஓட்டுறாங்கே விஜய் டிவிகாரங்கே...

  பதிலளிநீக்கு
 2. சரவணன் அய்யாதுரைசெவ்வாய், ஜூலை 25, 2017

  அருமை.. அருமை

  பதிலளிநீக்கு
 3. தமிழ் நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டேன் ஆனால் நான் இதுவரை பார்த்ததில்லை - வாய்ப்பு இல்லை."பெரிய அண்ணன்" - ஆங்கிலத்தில் ஒன்றிரண்டு பார்த்ததுண்டு.

  பார்த்து, நீங்கள் எலிமினேட் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

  கோ


  கோ

  பதிலளிநீக்கு
 4. இது போன்ற சேனல்களை முதலில் எலிமினேட் செய்ய வேண்டும்

  பதிலளிநீக்கு
 5. நீங்க ஷட்டப் பண்ணுங்க சகோ

  பதிலளிநீக்கு
 6. இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை. தப்பித்துவிட்டோம் என்றே நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. ஹஹஹ்ஹ்ஹ் அது சரி அப்ப பாக்கலைனா வீட்டு மெம்பர்ஸ் எலிமினேஷன் லிஸ்ட்ல தள்ளிடுவாங்களா...நாங்க பாக்கறதே இல்லையே...

  பதிலளிநீக்கு
 8. இது ஒரு எதிர்மறை விளைவு என்றே சொல்லலாம்,கிட்டத்தட்ட சரியில்லை என எல்லோராலும் சொல்லப்படுகிற ஒரு நிகழச்சியைப்பற்றி நாம் எல்லோருமே பேசிக்கொண்டிருக்கிறோம்/

  பதிலளிநீக்கு