செவ்வாய், 11 ஜூலை, 2017

காதல் ஊஞ்சல்

காதல்  ஊஞ்சல்
--------------------------------------
ஆல மரக் கிளைகளில்
தொங்கிக் கிடக்கிறது

காற்று மட்டும் வந்து
ஆட்டி விட்டுப் போகிறது

உந்தித் தள்ளிய
ஜோடிக் கால்கள்

மாறு பட்ட  பாதைகளில்
போய் விட்டதை   அறியாது

காத்துக் கிடக்கிறது
காதல்  ஊஞ்சல்
-----------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

6 கருத்துகள்:


 1. ஊஞ்சல் காத்திருக்கிறது அடுத்த ஜோடிக்கு!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்கள் சொல்ல வந்ததை ஸ்ரீராம் சொல்லிவிட்டார். ஸோ வழிமொழிகிறோம்...

   நீக்கு
 2. காதல் இணையர்களுக்காய்
  ஊஞ்சல் காத்துக் கிடக்கிறதோ

  பதிலளிநீக்கு