வியாழன், 4 மே, 2017

பறவைப் பதற்றம்

பறவைப் பதற்றம்
----------------------------
தத்தித் தத்தி வந்து
தண்ணீர் குடிக்கும்

பக்கத்துப் பருக்கைகளை
பற்றுவதிலும் கவனம்

கொத்தும் மூக்கிலும்
குடிக்கும் வாயிலும்  பதற்றம்

எங்கோ கேட்கின்ற
வெடிச் சத்தத்திற்கு

இங்கே இருந்தபடி
சிறகை விரித்து விடும்
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

3 கருத்துகள்: