ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

காதல் முகம்

காதல் முகம்
-----------------------
கண்களை மட்டும்
பார்த்தால் போதும்
காதல் எண்ணம் பிறந்து விடும்

மூக்கினை மட்டும்
பார்த்தால் போதும்
முன் கோபங்கள் புரிந்து விடும்

இதழ்களை மட்டும்
பார்த்தால் போதும்
இரவும் பகலும் பறந்து விடும்

முழுதாய் முகத்தைப்
பார்த்து விட்டாலோ
மொத்த உலகும் மறந்து விடும்
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

7 கருத்துகள்:

 1. அவ்ளோ திறமைசாலியா நீங்க?:).. சரி சரி அப்போ என் எழுத்தைப் பார்த்துக் கொஞ்சம் சொல்லுங்களேன்:).

  பதிலளிநீக்கு
 2. #மொத்த உலகும் மறந்து விடும்#
  ஏன் மயக்கம் போட்டு விழுந்து விடுவோமா :)

  பதிலளிநீக்கு
 3. காதல் முகம் கண்டோரை மயக்கிவிடும்தானே,,,?

  பதிலளிநீக்கு