ஞாயிறு, 12 மார்ச், 2017

வாழ்க்கைப் பயணம்

வாழ்க்கைப் பயணம்
--------------------------------------
வளைந்தும் நெளிந்தும்
வளரும் மரம்

வளைந்தும் நெளிந்தும்
ஓடும் ஆறு

வளைந்தும் நெளிந்தும்
வீசும் காற்று

வளைந்தும் நெளிந்தும்
போகும் பாதை

வளைந்தும் நெளிந்தும்
வாழ்க்கைப் பயணம்
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

11 கருத்துகள்:

 1. வளைந்த நாணலே ஆற்றின் வெள்ளோட்டத்தில் நிற்கிறது. நெடிதுயர்ந்து வளையாத மரங்கள் ஆற்றின் வெள்ளோட்டத்தில் அடித்துச்செல்கின்றன .......நல்ல கருத்து ! நன்றாக உள்ளது

  பதிலளிநீக்கு
 2. உண்மைதானே.. மேடு பள்ளம் நிறைந்ததுதான் வாழ்க்கை.

  பதிலளிநீக்கு
 3. நேராகச் சென்றுவிடும் வாழ்க்கையில் சுவையில்லை நண்பரே! கோணல்மாணலான வாழ்க்கைப் பாதையே நினைத்துப்பார்க்கும் அளவுக்கு அனுபவங்களைத் தரும்!
  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
 4. வளைந்தும் நெளிந்தும்
  போகும் பாதை--மங்கை நிற கூந்தலோ..என்று ஒரு பாடல் நிணைவுக்கு வந்தது

  பதிலளிநீக்கு
 5. சறுக்கி/ வழுக்கி விழுத்தும் சேற்றிலும்
  மேடு பள்ளம் நிறைந்த வழியிலும்
  பயணிக்க வேண்டி நிலையே
  வாழ்க்கைப் பயணம்!

  பதிலளிநீக்கு