வெள்ளி, 10 மார்ச், 2017

நெடுவாசல் நடுவயிறு

நெடுவாசல் நடுவயிறு
-----------------------------------------
நிலமென்னும் நல்லாளின்
உளம் மகிழப் பாடுபட்டு

வயலுக்கு நீர் பாய்ச்சி
உரமிட்டு களையெடுத்து

பயிராக்கி நெல்லாக்கி
அரிசியாக்கி சோறாக்கி

வீட்டுக்கு உணவு தரும்
விவசாயி விடுவாரா

நாட்டுக்கு நல்லதென்று
நடு வயிற்றில் குத்த வந்தால்
-------------------------------------நாகேந்திர பாரதி
 http://www.nagendrabharathi.com

11 கருத்துகள்:

 1. அருமையான கவிதை.பாரதிக்கு நிகரான கவிதை.

  பதிலளிநீக்கு
 2. அவர்கள் குத்துவது விவசாயின் நடுவயிற்றில் மட்டுமல்ல
  நிலமகளின் நெஞ்சில். மிக ஆழமாக :(

  பதிலளிநீக்கு
 3. அருமை
  போராடுவோம் வெற்றிபெறுவோம்

  பதிலளிநீக்கு
 4. எளிதாகப் புரியும் வகையில் உள்ள பதிவு.

  பதிலளிநீக்கு
 5. வீட்டுக்கு உணவு தரும்
  விவசாயி விடுவாரா

  நெடுவாசல் திறக்க வேண்டும்

  பதிலளிநீக்கு