செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

வரம்பில்லாக் காதல்

வரம்பில்லாக் காதல்
---------------------------------
மேடிட்ட விரல் நரம்பின்
மடிப்பினிலும் அதே காதல்

வாய் தளர்ந்து வருகின்ற
வார்த்தையிலும் அதே காதல்

வரியிட்ட விழியோரக்
கண்ணீரிலும் அதே காதல்

திணறிப் போய் விடுகின்ற
மூச்சினிலும் அதே காதல்

வயதுக்கும் அன்புக்கும்
வரம்பில்லா அதே காதல்
------------------------------------நாகேந்திர பாரதி
http://nagendrabharathi.com/

8 கருத்துகள்:

 1. அருமை நண்பரே...!!

  மூச்சுள்ளவரை மண்ணில்
  வாழும் அதே காதல்

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லாசனி, மார்ச் 04, 2017

  Aam வயதுக்கும் அன்புக்கும்
  வரம்பில்லா அதே காதல்

  பதிலளிநீக்கு