காலை நேரத்துக் கலக்கம் -நகைச்சுவைக் கட்டுரை
-----------------------------------------------------------------------------------------------------------------
அதிகாலை நேரத்திலே எந்திரிக்கறது நமக்கு
ஒண்ணும் விருப்பமான விஷயம்
இல்லைங்க. அன்னிக்கு என்னமோ அதிகாலையிலே விழிப்பு வந்துடுச்சு . தூக்கம் வரலே. சரி வெளியே போய்த்தான் பார்ப்போமேன்னு தெருவிலே வந்து பார்த்தா ஆஹா ஆஹா என்ன அருமையான காட்சி.
மெல்லிய காத்துக்குத் தலை ஆட்டி ஆடும் மரங்கள். தங்களுக்குள் அரட்டை அடித்துக் கொள்ளும் பறவைகளின் சங்கீதம் . அப்போது தான் மலர்ந்த மொட்டுக்களில் இருந்து வரும் வாசம். பக்கத்து
டீக்கடையில் இருந்து வரும் டீயின் வாச ருசிக்கு ஏங்கும் நமது நாக்கு சுவை மொட்டுக்கள். காற்றில் நிரம்பி இருக்கும் ஆக்சிஜென் , பெட்ரோல் , டீசல் வாசம் இன்றி நமது நுரையீரலை நிரப்பும் உணர்வு . ஆஹா ஆஹா
அதை அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது திடீர் என்று விழிப்பு வந்து விட்டது . அடடே எல்லாம் கனவா.
வழக்கம் போல் மணி ஒன்பது. அவசர அவசரமாக காலை வேலைகளை முடித்து விட்டு அலுவலகம் சேரும் பொழுது வழக்கம் போல் அரை மணி நேரம் லேட்டு.
அந்த மேனேஜரும் நாம் வருவதற்கு அஞ்சு நிமிஷம் முன்னால் தான் வந்திருப்பார். வழக்கம் போல் அதை காட்டிக் கொள்ளாமல் நமக்கு நேரத்தின் அருமை பற்றி லெக்ச்சர் எடுக்க ஆரம்பிப்பார். அவர் கூப்பிடுற மீட்டிங்குக்கு எல்லாம் நாம் ஒழுங்கா போகாததால் இந்த நேரத்தை பயன்படுத்தி நம்மை படுத்தி எடுப்பார். ப்ராஜெக்ட் சம்பந்தப்படட எல்லா விஷயங்களையும் பற்றி பாடம் நடத்த ஆரம்பித்து விடுவார். நாம், தலையை தொங்கப் போட்டுக் கொண்டு தூங்கி விடாமல் கேட்க வேண்டியதுதான்.
ஆஃபிஸில் இப்படின்னா நம்ம கிளம்பிறப்போ வீட்டிலே நம்ம படுத்தின பாடு இருக்கே. அப்பப்பா . ' என் பேண்ட் எங்கே சட்டை எங்கே ' ன்னு மனைவியைப் போட்டு படுத்தி எடுப்போம். அவளும் அடுப்படி வேலையை அம்போன்னு போட்டுட்டு நமக்கு வந்து உதவி செய்வாள். பலன்.
நம்ம டைனிங் டேபிள் போய் அமர கிடைப்பது கருகிப் போன தோசை. நம்ம
தப்புக்கு தண்டனை.
நம்ம ஸ்கூல் காலம் மட்டும் எப்படி . வருஷம் முழுக்க ஒழுங்கா படிக்காம , ஸ்டடி லீவு வந்ததும் புத்தகத்தை எடுத்துப் பிரிப்போம். இதுவா
நம்ம பரீட்சை எழுதப் போற பாடம்னு அப்பத்தான் சந்தேகம் வரும். மாங்கு மாங்குன்னு படிச்சாலும் ஒண்ணும் மண்டையில் ஏறாது. டியூஷன் , குரூப் ஸ்டடி ன்னு ஆரம்பிப்போம் .
இந்த குரூப் ஸ்டடி லே பசங்க
பித்தகோரஸ் தியரத்துக்கு ஆளாளாளுக்கு வேற வேற டெபினிஷன் கொடுப்பாங்க.
எதை எடுப்பதுன்னு புரியாம குழம்புவோம். தியரம் எல்லாம் துயரம் ஆகும். பயந்துகிட்டே
போயி பரீட்சை எழுதி பாதி பேரு பார்டரிலே பாஸ் ஆவோம்.
ஒழுங்கா அதி காலையிலே எழுந்து வேலைகளை நிதானமா பார்த்திருந்தா, பரீட்சையில் நல்ல மார்க் கிடைச்சிருக்கும். வீட்டிலேயும் நல்ல தோசை கிடைச்சிருக்கும். ஆபிஸிலேயும் ப்ரோமோஷன் கிடைச்சிருக்கும். காலை நேர கலக்கம் காணாமல் போயிருக்கும். அதிகாலை நேரம் ஆனந்தமா
இருந்திருக்கும்
.
நம்ம என்ன முயற்சி பண்ணாமையா இருக்கோம். ஜனவரி ஒண்ணாம் தேதி முடிவு எடுப்போம் சீக்கிரம் எந்திருக்கணும்னு. ரெண்டாம் தேதி காலை அலாரத்தை மாத்திட்டு
இழுத்திப் போத்திக்கிட்டு தூங்குவோம். என்ன
காரணம்னு யோசித்தா ஒண்ணு புரியுதுங்க. படுக்க லேட்டாறதுனாலேதான் எந்திரிக்க லேட்டாறது .
என்ன பண்றது. நைட் பனிரெண்டு மணி
வரைக்கும், வாட்ஸ் அப் , பேஸ் புக் குன்னு
கமெண்ட் போட வேண்டியதா இருக்கு. யாரும் படிக்குறாங்களோ இல்லையோ அரசியல், சினிமான்னு அத்தனையைப் பத்தியும் நம்ம அபிப்பிராயத்தை உலகத்துக்கு தெரிய படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். போனில் விரலை வச்சு தேய்ச்சு தேய்ச்சு நம்ம
ஆட்காட்டி விரலே சுண்டு விரல் மாதிரி தேய்ந்து போச்சு .
அந்த
மரங்களின் ஆட்டம் , அந்த பறவைகளின் சங்கீதம், அந்த பூக்களின் வாசம் எல்லாம் கனவிலே தான் கிடைக்கும் போல இருக்கு. நமக்கு படுத்து வச்சது , இல்லையில்லை ,கொடுத்து
வச்சது அவ்வளவு தாங்கோ.
---------------------------------------------------------------------நாகேந்திர பாரதி
மிகவும் யதார்த்தம்
பதிலளிநீக்குஹா..... ஹா..... ஹா....
பதிலளிநீக்குநான்லாம் சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழும் ஆள்!
ரசித்தேன்
உண்மையை புட்டு புட்டு வைச்சிட்டீங்க...!
பதிலளிநீக்கு"போனில் விரலை வச்சு
பதிலளிநீக்குதேய்ச்சு தேய்ச்சு
நம்ம ஆட்காட்டி விரலே
சுண்டு விரல் மாதிரி
தேய்ந்து போச்சு." என்கிறியள்...
இன்றைய
பிஞ்சுகள் தொட்டுப் பழங்கள் வரை
நடைபேசியை வைச்சு
நோண்டி நோண்டிப் பார்க்கிறார்கள்...
கண்கள் மங்குமாம்
கண்ணிழந்த சிலர் சொன்னார்களே!
ஐயோ!ஐயோ! நான் நினைப்பதை அப்படியே ஒருத்தர் எழுதி விட்டாரே!!சீக்கிரம் படுத்து சீக்கிரம் எழ வேண்டும் என்னும் நினைப்பில் குறை இல்லை. இப்போது கூட 10:30க்கு வீட்டில் எல்லோரும் தூங்கியாச்சு,நான் மட்டும் செல்லை நோண்டிக் கொண்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குநான் சீக்கிரம் எழுந்து கொள்ளும் ரகம் .ஆனாலும் அரக்கப் பரக்கத்தான்.ஹிஹி .இதுக்கெல்லாம் கவலைப் படக்கூடாது
பதிலளிநீக்குயாரும் படிக்கிறாங்களா இல்லையோ...சரியான ஆதங்கம்.
பதிலளிநீக்குகொடுமை என்னான்னா அடுத்தவங்களை செல் அடிமைன்னு குறை சொல்வோம் :)
பதிலளிநீக்கு